புத்தளத்தில் சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி புத்தளம் நகரிலிருந்து கொழும்பு செல்லும் வீதி பாலாவி பிரதேசத்தில் நீரில் மூழ்கியுள்ள அதேவேளை, புத்தளம் – குருணாகல் வீதி அரலிய உயன, 2ஆம் கட்டை, தம்பப்பண்ணி ஆகிய பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த வீதிகளை பயன்படுத்துபவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பினை அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.
இதேவேளை கொழும்பு, வத்தளை உள்ளிட்ட பகுதிகளில் சிறு வெள்ள நிலை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
களனி ஆற்றின் நீர் மட்டம் உயர்வதால் இந்த நிலை உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.