புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாட விரும்புவதாக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட கருத்தை, ஐக்கிய மக்கள் சக்தி ஆளும் கட்சியாக இருந்து கூறியிருந்தால், அதற்கு இனவாத சாயம் பூசப்பட்டிருக்கும் என்கிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது அவர் இதனைச் சுட்டிக்காட்டினார். இதன்போது மேலும் உரையாற்றிய சாணக்கியன், “புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அரச தலைவர் கோட்டாபய தெரிவித்திருக்கின்றார். இந்தச் சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு நன்றி தெரிவிக்கின்றேன். இன்று மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சியில் இருந்திருந்தால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கமாக இருந்து புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவிரும்புவதாக தெரிவித்திருந்தால் – மஹிந்த ராஜபக்ச நாட்டில் இனவாதத்தை தோற்றுவித்திருப்பார்.
இவ்வாறு கத்தி கூச்சலிட்டு ஜிஎஸ்பியை தக்கவைத்துக்கொள்ள முடியாது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காத வரை ஜிஎஸ்பியை தக்கவைத்துக்கொள்ள முடியாது” என்றார்.