மாத்தறை, பண்டாரவத்தை பிரதேசத்தில் காணி தகராறு காரணமாக பெண் ஒருவரும் அவரது குழந்தையும் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவியினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த பெண் தற்போது கம்புருப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தலை மற்றும் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேலதிக சிகிச்சைக்காக இன்று மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்படவுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்