பேஸ்புக் பெயர் மெட்டா என்று மாறியது

பேஸ்புக் பெயர் மெட்டா என்று மாறியது

பிரபல சமூக ஊடக நிறுவனம் பேஸ்புக், தனது பெயரை மாற்றியுள்ளது. இதை, தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்தார். நிறுவனத்தின் ஆண்டு கூட்டத்தில் பேசிய தலைமை நிர்வாக அதிகாரி மார்க் அறிவித்தார்.

மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாக தெரிவித்த மார்க் ஜூக்கர்பெர்க்,  அதனை பிரதிபலிக்கும் வகையில், பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு முன்னதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது பேஸ்புக், மெட்டா என்ற புதிய பெயரைப் பெற்றுள்ளது.

இது குறித்து, பேஸ்புக் நிறுவனத்தின் கனெக்ட் விர்ச்சுவல் ரியாலிட்டி மாநாட்டில் பேசியபோது, பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் பெயர் மாற்றத்தை அறிவித்தார்.

அவரது உரையின் சாரம்சம்: ”சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமான ‘பேஸ்புக்’கின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் “மெட்டா” என்று பெயர் பெறுகிறது பேஸ்புக்”.

”சமூக பிரச்னைகளுடன் போராடி நாம் நிறைய கற்றுக் கொண்டோம், கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது”.
“ஆன்லா, நிறுவனத்தின் செயலிகள் மற்றும் அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை” என்று மார்க் தெரிவித்தார்.

பேஸ்புக்கின் பெயர் மாற்றத்திற்கு காரணமான மெட்டாவெர்ஸ் என்றால் என்ன? என்பது தொடர்பாக தற்போது சமூக ஊடகங்களில் விவாதங்கள் களை கட்டீஉள்ளன.  மெட்டாவெர்ஸ் விர்ச்சுவல் உலகம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் என்றாலும், மக்களை மேலும் அதிகமாக ஆன்லைனில் இருக்க வைக்கும் உத்தி என்றும் நம்பப்படுகிறது.

மெட்டாவர்ஸ் என்பது சமூக இணைப்பின் அடுத்த பரிணாமம். இது உலகெங்கிலும் உள்ள மக்கள்  அனைவருக்குமான கூட்டுத் திட்டமாகும். இன்று சாத்தியமாக இருப்பதையும் தாண்டி, மேலும் மக்கள் இணக்கமாக பழகவும், கற்றுக்கொள்ளவும், ஒத்துழைக்கவும் விளையாடவும் முடியும் என்று கூறப்படுகிறது.

எனினும் அதன்  தளங்களான முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்கு இந்த பெயர் மாற்றம் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *