அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஒன்று புள்ளி 9 டிரில்லியன் டொலர் கொரோனா நிதியுதவித் திட்ட மசோதாவுக்கு, நாடாளுமன்றத்தின் செனட்டில் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.
கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்புகளுக்காக எத்தனை காலம் நிதியுதவி வழங்குவது, எந்த அளவுக்கு நிதியுதவி வழங்குவது உள்ளிட்டவற்றில் ஒரு தீர்வு ஏற்படாததை தொடர்ந்து அந்த மசோதாவை நிறைவேற்றுவதில் செனட் உறுப்பினர்கள் தயக்கம் காட்டியதால், அது நிறைவேற்றப்படவில்லை.
ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு பைடன் கொண்டு வந்த இந்த முதலாவது பெரிய நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டிருப்பது அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
வேலையிழந்தவர்களுக்கு வரும் ஓகஸ்ட் மாதம் வரை வாரம் தோறும் 400 டொலர் உதவி வழங்கலாம் என்ற பைடனின் முடிவுக்கு பலத்த எதிர்ப்பு உருவானதும் மசோதா தோற்க காரணம் என கூறப்படுகிறது.