கொவிட்-19 தாக்கம் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பை செயற்படுத்தக் கூடாது என அரசாங்கத்தை வலியுறுத்தி கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வின் விளைவாக பொதுமக்கள் தற்போது மேலும் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக கர்தினால் தெரிவித்துள்ளார்.பயணத் தடை மற்றும் எக்ஸ்பிரஸ் கப்பல் அனர்த்தம் ஆகியவற்றால் கடுமையாக பாதிப்பை எதிர்கொண்டுள்ள மீனவர்கள் மீன் பிடிக்க எரிபொருளையே சார்ந்துள்ளனர். அவர்களும் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் எரிபொருள் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கர்தினால் மெல்கம் ஆண்டகை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.