பல சிரேஷ்ட அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை காரணமாக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் டொலர் கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சில இன்னும் பெறப்படவில்லை என தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாக நெருக்கடி என்ற போர்வையில் குறிப்பிட்ட சில அரச அதிகாரிகள் தமது கடமைகளை உரிய முறையில் செய்யத் தவறியமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கேட்டறிந்துள்ளார். இது தொடர்பில் மிலிந்த மொரகொட தெரிவித்ததையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு அரச தலைவர் கோட்டாபய எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரத ஸ்டேட் வங்கி கடன் வசதியை வழங்குகிறது மேலும் இந்தக் கடனின் கீழ் இறக்குமதி செய்யக்கூடிய பொருட்களை நிதி அமைச்சகம் தீர்மானிக்கிறது. எரிபொருள் இறக்குமதிக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தனி கடன் உள்ளது, அதில் 468 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்தியாவிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது.