பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன- ஜனாதிபதி…

பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன- ஜனாதிபதி…

நாட்டில் எத்தகைய சவால்கள், தடைகள் இருந்தாலும், நாம் கைவிட முடியாத பல தேசிய பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அவற்றில், புனித தந்த தாதுக்காக நடத்தப்படும் கிரியைகளுக்கு முதலாவது இடம் வழங்கப்படும் மரபு, பழங்காலத்திலிருந்தே ஆட்சியாளர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வரலாற்று முக்கியத்துவமிக்க ஸ்ரீ தலதா பெரஹரா, இம்முறையும் மிக வெற்றிகரமாக நடத்தப்பட்டு நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில், கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று (23) இடம்பெற்ற நிகழ்விலேயே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தேசத்தின் முக்கியமான கலாசார விழாவாகக் கருதப்படும் கண்டி எசல பெரஹரா, பண்டைய பாரம்பரியங்களைப் பேணி வெற்றிகரமாக நிறைவுபெற்றதைக் குறிக்கும் வகையில், எசல பெரஹரா சந்தேஷப் பத்திரம், தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.உற்சவத்தை வெற்றிகரமாக நடத்த உதவிய அரசாங்கத்துக்கும் அனைத்துத் தரப்பினருக்கும், தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். தொற்றுநோய் நிலைமைகள் இருந்தபோதிலும், 1711ஆவது பெரஹரா நிகழ்வை நடாத்தி, எதிர்கால சந்ததியினருக்கு எமது கடந்தகாலப் பொறுப்புகளை எடுத்துக்காட்ட முடிந்துள்ளது என்று இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.  

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *