காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புகளின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளுவதற்கான கலந்துரையாடல், அரச தலைவரின் விசாரணை ஆணைக்குழுவின் உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸின் தலைமையில் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், கிளிநொச்சி மாவட்ட செயலக வாசலில் நின்றிருந்தனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்,
கிளிநொச்சி மாவட்டத்தில் நாங்கள் 1700 நாட்களுக்கும் மேலாக எமது போராட்டம் தொடர்ந்து செல்கின்ற வேளை இவர்கள் எங்களுடைய போராட்டத்தை மழுங்கடிப்பதற்காகவே இவ்வாறான பதிவுகளை மேற்கொள்கிறார்கள்.
இது தொடர்பாக எத்தனையோ ஆணைக்குழுக்களிடம் தெரிவித்துள்ளோம் எனவும் இன்று இடம்பெறுகின்ற கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தில் இருந்து பலரைக் கூட்டி வந்து குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தாம் இவர்களின் விசாரணைகளுக்கு துணை போக மாட்டோம் எனவும் தெரிவித்திருந்தனர்.