பொருளாதாரத்தை காரணம் காட்டி மக்களின் உயிரை தியாகம் செய்ய வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,கொவிட் கட்டுப்படுத்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுக்களால் அதனை வெற்றிகரமாக செய்ய முடியாது. எனவே அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி அமைச்சரவையும் ஜனாதிபதியும் இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வருட இறுதிக்குள் சகலருக்கும் தடுப்பூசிகளைப் வழங்க முடியாது என்பதால் , வைரஸ் மேலும் பரவாதிருப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இதன் போது மருத்துவ ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.குறிப்பாக பொருளாதாரத்தை காரணம் காட்டி மக்களின் உயிரை தியாகம் செய்ய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது, நாட்டுக்கு 3 கோடி கொவிட் தடுப்பூசிகள் தேவையாகவுள்ளது. எனினும் அந்த தொகை முழுவதையும் இவ்வருடத்திற்குள் பெற்றுக் கொள்ள முடியாமல் போகும்.
எனவே புதிதாக சிந்தித்து புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. முதற்கட்டமாக அஸ்டராசெனிகா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக துரிதமாக வழங்குவதற்கு முயற்சிக்க வேண்டும். அரசாங்கம் இதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.எவ்வாறிருப்பினும் இவ்வருட இறுதிக்குள் சகலருக்கும் தடுப்பூசிகளைப் வழங்க முடியாது என்பதால் , வைரஸ் மேலும் பரவாதிருப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இதன் போது மருத்துவ ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக பொருளாதாரத்தை காரணம் காட்டி மக்களின் உயிரை தியாகம் செய்ய வேண்டாம். மத்திய வங்கி நாணயத்தாள்களை அச்சிட்டமையின் காரணமாகவே இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. கடந்த நவம்பரில் 20 கோடி டொலர் தடுப்பூசிக்கு முதலீடு செய்யப்பட்டிருந்தால், இந்த நாட்டில் இன்று தடுப்பூசி பிரச்சினை இருந்திருக்காது.அந்நிய செலாவணியை ஈட்டுவதாகக் குறிப்பிட்டு நாம் இந்த வைரஸ் நாட்டில் தீவிரமாக பரவ இடமளித்துள்ளோம். எனவே வெறுமனே குழுக்களால் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது. நாட்டை மூட வேண்டிய தேவை ஏற்பட்டால், நிவாரணம் தேவைப்படும் மக்களுக்கு அதனை வழங்க வேண்டும்.
அமைச்சரவையும் ஜனாதிபதியும் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை உபயோகித்து கொவிட் கட்டுப்படுத்தலுக்கான தயார்ப்படுத்தல்களை முன்னெடுக்க வேண்டும். அமைச்சரவையை இழிவுபடுத்த வேண்டாம். நாட்டின் சுகாதார பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவதற்காக வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். அதன் மூலம் நாட்டையும் மக்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.