எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கும் என தாம் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.மல்வத்து மற்றும் அஸ்கிரிய தலைமை பீடாதிபதிகளை இன்று (30) சந்தித்த மைத்திரி, ஊடகங்களுக்கு உரையாற்றும போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத் தேர்தலில் சவால் இருந்தபோதிலும், எங்கள் கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 உறுப்பினர்களும் எளிதாக நாடாளுமன்றத்திற்கு செல்லவில்லை.சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை அமைக்கும் என்பதே எங்கள் நம்பிக்கை.இதற்காக சுதந்திரக் கட்சியை சுற்றி ஒன்றுபட மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் மைத்திரி குறிப்பிட்டார்.