“இலங்கையில் நாளாந்தம் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. எனவே, மக்கள் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:- ஒவ்வொருவரும் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்துப் பொறுப்புணர்வுடன் செயற்பட்டால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். அதேவேளை, தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ள மக்கள் அனைவரும் முன்வர வேண்டும். எக்காரணம் கொண்டும் தடுப்பூசிகளைப் பெறுவதில் மக்கள் தயக்கம் காட்டக்கூடாது. தடுப்பூசிகள்தான் எமக்குப் பாதுகாப்புக் கவசமாக இருக்கின்றது. தடுப்பூசிகளைப் பெற்றவர்களும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி சமூகத்தில் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும் என்றார்.