மட்டக்களப்பில் வருட இறுதி களியாட்ட நிகழ்வை நடாத்திய, விடுதி உரிமையாளர் உட்பட 47 பேர் தனிமைப்படுத்தலில்.

மட்டக்களப்பில் வருட இறுதி களியாட்ட நிகழ்வை நடாத்திய, விடுதி உரிமையாளர் உட்பட 47 பேர் தனிமைப்படுத்தலில்.

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வருட இறுதி புத்தாண்டு களியாட்ட நிகழ்வை நடாத்திய மட்டக்களப்பிலுள்ள பிரபல சுற்றுலா விடுதியொன்றின் உரிமையாளர் உட்பட நிகழ்வை ஏற்பாடு செய்த  தனியார் நிறுவனமொன்றின் 46 உறுப்பினர்கள் அடங்கலாக 47பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்லடி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.அமிர்தாப் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை முழுமையாக மீறி நேற்றிரவு(15.12.2020) 7 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில், மட்டக்களப்பிலுள்ள தனியார் நிறுவனத்தினர் வருட இறுதி களியாட்ட நிகழ்வு நடாத்தப்பட்டபோது, அங்கு சென்ற சுகாதார அதிகாரிகளும் காத்தான்குடி பொலிசாரும் குறித்த விடுதியின் உரிமையாளர் மற்றும் விடுதியில் பணிபுரிவோர் நிகழ்வில் கலந்து கொண்டோரென 47 பேரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு நீதிமன்ற அனுமதியின் பேரிலேயே குறித்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *