மணியரசன், சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் மீது இன்று வழக்கு விசாரணை

மணியரசன், சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் மீது இன்று வழக்கு விசாரணை

2008இல் விடுதலைப் புலகளுக்கு ஆதரவாக பேசியதாக பெ.மணியரசன், சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை, ஈரோடு நீதிமன்றில் இன்று காலை இடம்பெற்றது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் கடந்த 2008 டிசம்பர் மாதம் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய பொதுக்கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், நாம் தமிழர் கட்சி தலைவர் திரு. சீமான், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி ஆகியோர் மீது அப்போதைய தி.மு.க. அரசு வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்தது.

கோவை நடுவண் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இம்மூவரும் பின்னர் பிணையில் விடுதலை ஆனார்கள். தொடர்ந்து இவ்வழக்கு ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று (17.12.2020) காலை ஈரோடு நீதிமன்றத்தில் மூவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையில் மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் நேர்நின்றார். நீதிபதி மணிவேல் அவர்கள் இவ்வழக்கு விசாரணையை 05.01.2021 அன்று ஒத்தி வைத்தார்

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *