புதிய வைரஸ் திரிபுகளினால் நாட்டுக்கு பிரச்சினை ஏற்படாவிட்டால் ஒக்டோபர் இறுதியில் கொரோனா மரணங்கள் குறைவடையும் சாத்தியம் உள்ளதாக வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார். கொரோனா தொற்றினால் நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய நிலைமையை விட சற்று இலகுவான நிலைமை ஏற்படுவதாக இருந்தால், எனது கணிப்பின் பிரகாரம் செப்டம்பர் இறுதியாகும்போது தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடையும். நோயாளர்கள் குறைவடைந்து இரண்டு வாரங்கள் செல்லும்போது மரணங்களும் குறைவடையும்.
புதிய வைரஸ் திரிபுகளினால் எமக்கு பிரச்சினை ஏற்படாவிட்டால் ஒக்டோபர் நடுப்பகுதியாகும்போது குறிப்பிடத்தக்களவில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் குறைவடையும் சாத்தியம் இருக்கின்றது. மேலும், 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் செப்டம்பர் ஆரம்பமாகும்போது நூறு வீதம் பூரணமாகும் என சுகாதார அமைச்சு அறிவித்திருக்கிறது.
அதன் பிரகாரம் செப்டம்பர் இறுதியாகும்போது இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது. மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட பின்னர்தான் நாங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் ஏற்படுமென நினைக்கிறோம் என்றார்.