மரணம் அடைந்த இளவரசர் பிலிப் பற்றி ருசிகர தகவல்.

மரணம் அடைந்த இளவரசர் பிலிப் பற்றி ருசிகர தகவல்.

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். இதயக் கோளாறால் அவதிப்பட்டு வந்த பிலிப் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 99.வருகிற ஜூன் 10-ந் தேதி 100-வது பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் அவர் காலமானார். கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இதயக்கோளாறு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.20 நாட்கள் சிகிச்சை பெற்று அரண்மனைக்கு திரும்பி இருந்த நிலையில் இறந்தார். அவரது மறைவுக்கு இங்கிலாந்து பிரதமர் மோரிஸ் ஜான்சன், இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கிரீஸ் டென்மார்க் அரச குடும்பத்தில் 1921-ம் ஆண்டு கோர்பு என்ற தீவில் பிலிப் பிறந்தார். பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கல்வி பயின்றார்.1934-ம் ஆண்டு எலிசபெத்தை முதல் முறையாக பிலிப் சந்தித்தார். பின்னர் 1939-ம் ஆண்டு 2-ம் உலகப்போர் நடந்த போது ராணி எலிசபெத்-பிலிப் இடையே பேச்சுவார்த்தைகள், சந்திப்புகள் அடிக்கடி நடந்தது. இதில் இருவரும் காதலில் விழுந்தனர்.அப்போது எலிசபெத்துக் கும் 13 வயது, பிலிப்புக்கு 18 வயது ஆகும். அந்த சமயத்தில் பிலிப் பிரிட்டன் கடற்படையில் சேர்ந்து இருந்தார். அவர்கள் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக நேசித்தனர்.

இதையடுத்து 1947-ம் ஆண்டு 6-ம் ஜார்ஜ் மன்னர் சம்மதத்துடன் எலிசபெத்தை பிலிப் திருமணம் செய்தார். திருமணத்துக்கு முன்பு தனது கிரீஸ் டென்மார்க் அரச குடும்ப பட்டத்தை துறந்தார்.1952-ம் ஆண்டு எலிசபெத் ராணியாக மூடி சூட்டப்பட்டபின் பிலிப் தான் பணியாற்றிய ராணுவ பதவியில் இருந்து விலகினார். பின்னர் பிலிப் இங்கிலாந்து இளவரசராக 1957-ம் ஆண்டு முடிசூட்டப்பட்டார்.இளவரசர் பிலிப் – ராணி எலிசபெத் இருவரும் அன் யோனியமாக மகிழ்ச்சியுடன வாழ்ந்தனர். அவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தங்களது 73-வது திருமண நாளை கொண்டாடினர். அவரது மறைவு அரச குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிலிப் பல்வேறு சமூக மற்றும் தொண்டு சேவைகளில் ஈடுபட்டு வந்தார். 2011-ம் ஆண்டு அவருக்கு இதயத்தில் லேசானஅடைப்பு காரணமாக ஆபரேசன் செய்யப்பட்டு 2017-ம் ஆண்டு தனது 96-வது வயதில் பொது வாழ்க்கை பணியில் இருந்து விலகினார்.2018-2019-ம் ஆண்டுக்களில் அவருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இங் கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் இளவரசராக நீண்ட காலம் இருந்தவர் பிலிப் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *