மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக மேலும் 29 பேரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலத்தினை பதிவுசெய்துள்ளது.
அந்தவகையில் 09 சிறை அதிகாரிகளிடமும் 20 கைதிகளிடமிருந்தும் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும், மஹர சிறைச்சாலையில் இணைக்கப்பட்ட மருத்துவரிடமிருந்தும் சாட்சியம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி இதுவரை 54 சிறைச்சாலை அதிகாரிகள், 12 மருத்துவர்கள், 07 ஆண் செவிலியர்கள் மற்றும் 73 கைதிகள் என 145 பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதேவேளை சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின் மை காரணமாக இறந்த 11 கைதிகளில் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் வத்தளை நீதவான் நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி 04 பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதன்படி, இறந்தவர்களிடமிருந்து இரத்த மாதிரிகள் மற்றும் கைரேகைகளும் பெறப்பட்டன என்றும் அனைத்து உடல்களும் புகைப்படம் எடுக்கப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டு குற்றப்புலாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.