பிரதமர் அவர்களே தற்போதாவது தெற்கின் வீர சிங்களவர் என்ற வகையிலும் படை வீரன் என்ற வகையிலும் நீங்கள் முன்வந்து நாட்டை காப்பாற்றுங்கள் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,சுகாதார துறையில் தான் அறிந்த பிரச்சினைகள் உட்பட நாட்டின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி முதல் கீழ் மட்டத்தில் இருக்கும் சகல அதிகாரிகளுக்கும் தெளிவுப்படுத்திய போதிவும் எவ்வித தீர்வும் கிடைக்காத நிலைமையில், தான் பிரதமரின் இந்த கோரிக்கையை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எம்மிடம் இருக்கும் சகல அறிக்கைகளையும் நாங்கள் ஒரே நேரத்தில் வெளியிட்டால், அவை எங்கு போய் முடியுமோ தெரியாது. ஜனாதிபதிக்கு நேற்று முன்தினம் கடிதம் ஒன்றை அனுப்பினோம். சுகாதார அமைச்சரை தொடர்புக்கொண்டு பல முறை கூறினோம்.சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரிடம் கூறினோம். தற்போது இந்த பிரச்சினைகளை யாரிடம் கூறுவது என்று தேடிக்கொண்டிருக்கின்றேன். மக்களின் பாதுகாப்புக்காக சர்வதேச தொழிலாளர் அமைப்பிடமே தற்போது இந்த பிரச்சினைகளை கூற வேண்டியுள்ளது.
அந்த அமைப்பிடமாவது கூறி பார்ப்போம். இலங்கையில் நான் கூற எவரும் இல்லை. பிரதமரிடம் கூறினோம். பிரதமரும் பதிலளிக்கவில்லை. அவர் எதற்கு பதிலளிப்பதில்லை. பிரதமர் அவர்களே தற்போதாவது தெற்கின் வீர சிங்களவர் என்ற வகையிலும் படை வீரன் என்ற வகையிலும் நீங்கள் முன்வந்து நாட்டை காப்பாற்றுங்கள்.
தயங்க வேண்டாம். எங்களுக்கு தெரியும் நீங்கள் தற்போது சுகவீனமாக உள்ளீர்கள். சுகவீனமாக இருந்தாலும் உங்கள் மீதான நம்பிக்கை காரணமாக நாட்டில் மாற்றம் ஏற்பட்டது.இந்த நம்பிக்கையை சீர்குலைத்துக்கொள்ளாது மேலும் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு நான் மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.