ஜேர்மனியில் பல வைத்தியசாலைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை சமாளிக்க அந்நாட்டு அரசாங்கம் அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.இந்நிலையில் வைத்தியசாலைகளில் படுக்கைகள் இல்லாததால் தீவிர சிகிச்சை நோயாளிகளை விமானம் மூலம் இடம் மாற்ற ஜேர்மனி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை ஜேர்மன் விமானப்படை தீவிர சிகிச்சை நோயாளிகளை இடம் மாற்றுவதற்கு உதவும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் முன்பு இல்லாததை விட தற்போது கொரோனா தொற்று பரவலில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் அரசாங்கம் எச்சரித்ததை தொடர்ந்து ஜேர்மன் சுகாதார அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.கொரோனா தொற்று பரவலை தடுக்க மக்களிடையேயான தொடர்பைக் கடுமையாகக் குறைக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறினார்.
மேலும் இன்று (26) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெற்கு நகரமான Memmingen-ல் இருந்து வடக்கு Rhine-Westphalia மாநிலத்திற்கு தீவிர சிகிச்சை நோயாளிகள் Luftwaffe A310 medevac விமானம் மூலம் இடம் மாற்றம் செய்யப்படுவார்கள் என ஜேர்மன் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஜேர்மனியின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் எச்சரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 72,156 பேர் பாதிக்கப்பட்டதோடு 374 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியில் இதுவரை மொத்தமாக 56 கோடியே 95 ஆயிரத்து 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 1 ஆயிரத்து 170 பேர் மரணமடைந்துள்ளனர்.பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 8 இலட்சத்து 18ஆயிரத்து 736 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 4,070 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.பிரித்தானியாவில் 30,900 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 47 இலட்சத்து 75 ஆயிரத்து 300 பேர் குணமடைந்துள்ளனர்.