“பைசா்“ உட்பட்ட கொரோனாத் தடுப்பூசிகளின் காலம் ஆறு மாதங்களுக்கு மாத்திரமே என்ற அடிப்படையில், மீண்டும் ஒரு கொரோனாத் தொற்று அலை ஏற்படலாம் என்பது தொடா்பில் உலக சுகாதார நிறுவனம் இன்னும் உத்தியோகபூர்வ அறிவித்தலையும் வழங்கவில்லை என்று இலங்கையின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விடயத்தி்ல் உலக சுகாதார அமைச்சின் அறிவிப்புக்கு இணங்கவே இலங்கை அரசாங்கம் செயற்படுவதாக சுகாதார அமைச்சா் கேஹலிய ரம்புக்வெல்ல தொிவித்துள்ளாா்.
சுகாதார ராஜாங்க அமைச்சா், சன்ன ஜெயசுமன்ன, அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே கேஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டுள்ளாா்.
நோய் ஒன்றுக்கான தடுப்பூசிகளை பரீட்சிக்கும் போது பெரும்பாலும் அது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 10 வருடங்களாவது செல்கின்றன.
எனினும் கொரோனாத் தடுப்பூசிகள், அவசர பயன்பாட்டின் கீழ் நோய்த்தடுப்பு என்பதைக் காட்டிலும் மரணத்தை குறைக்கும் அடிப்படையிலேயே தயாாிக்கப்பட்டுள்ளன.
எனவே தற்போதைய பாிசோதனைகளின் முடிவுகளின் பல்வேறு முடிவுகள் அவ்வப்போது வெளியிடப்பட்டாலும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவித்தலுக்கு அமையவே இலங்கை அரசாங்கம் செயற்படும் என்று அமைச்சா் கேஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டாா்.