மீண்டும் பேர்ள் காபர் ( Pearl Harbor ) தாக்குதலுக்குள்ளான அமெரிக்கா – மோசே தயான்

மீண்டும் பேர்ள் காபர் ( Pearl Harbor ) தாக்குதலுக்குள்ளான அமெரிக்கா – மோசே தயான்

டிசம்பர் மாதம் 7ம் திகதி 1941ம் ஆண்டு எவரும் எதிர்பாராத வேளையில் யப்பான் நாட்டு போர் விமானங்கள் பேர்ள்  காபரில் அமைக்கப்படட அமேரிக்க  கடற்படைத் தளத்தை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பல கடற்படைக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டதோடு 2403 வீரர்கள் இரு மணித்தியால தாக்குதலில்   கொல்லப்பட்டனர். அமெரிக்கா முதன் முறையாக அடிவாங்கி அதிர்ச்சியுற்ற நாள் அது. இந்தத் தாக்குதலே அமேரிக்கா இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஈடுபடக் காரணமாய் அமைந்ததுமல்லாமல் யப்பான் நாட்டின்மீது அணுக்குண்டு வீசக்  காரணமாயும்  அமைந்தது. மேற்குறிப்பிட்ட தாக்குதலுக்கு ஒப்பாகவே அமெரிக்காமீதான சைபர் தாக்குதல் அமைந்தது. குறிப்பிட்டுச் சொல்லப்போனால் அண்மையில் நூற்றுக்கணக்கான அரசாங்கத்தின் பாதுகாப்பு கட்டமைப்பின் மீதும் முக்கிய பொருளாதார அமைப்புக்கள் மீதும், தேர்தல் சம்பத்தப்பட்ட  ஸ்தாபனங்கள் மீதும் சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இது மிக மோசமான எதிர் பாராத பேர்ள் காபர்  தாக்குதல் போன்றது என பல தலைவர்கள் கருதுகின்றனர். சைனா, ஈரான் ரஸ்யா போன்ற நாடுகளே சந்தேகத்திற்குள்ளாகியுள்ளன. அமேரிக்காவின் இன்றைய சிக்கல் நிலைக்கு இதுவே காரணம்..

எதிர்வரும் மூன்று வாரங்களும் அமேரிக்க  நாட்டுக்கு மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்துக்கும் ஒரு முக்கிய  வாரங்களாக அமைவது மட்டுமன்றி அமெரிக்க யாப்பின் மகிமையை அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகவும் அமையப்போகின்றது. அமெரிக்காவில் ஒருவர் ஜனாதிபதியாக வாக்கெடுப்பினால் தெரிவு செய்யப்பட்டு தோல்வியடைந்த வேட்பாளரால் ஒத்துக்கொள்ளப்படும்போது (concede) எந்தச்சிக்கலுமின்றி அவர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார் அப்போது  எந்த  சட்டச் சிக்கல்களும் ஏற்படாத காரணத்தால்  அமெரிக்க யாப்பின் மகிமை அனைவருக்கும் தெரிய வருவதில்லை. இம்முறை நடந்த ஜனாதிபதித் தேர்தலில்  வழமைக்கு மாறாக அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டதையும் பணக்காரர்களின் சொத்துக்களான பல பெயர்பெற்ற ஊடகங்கள் பக்கச்சார்பாக நடந்து எலக்ரோரல்  கொலீச்சையும் (electoral college) முந்திக்கொண்டு யார் அடுத்த ஜனாதிபதி  என அறிவித்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது.

நடந்து முடிந்த தேர்தலில் திருட்டும் புரட்டும் நடந்துள்ளது, இறந்தவர்களும் பதியப்படாதவர்களும் வாக்களித்ததோடு தபால்மூல வாக்குகளில் பெரும் மோசடி நடைபெற்றுள்ளது என ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் அவர்கள் பல ஆதாரங்களோடு நீதிமன்றங்களை நாடியுள்ளார். தேர்த்தலுக்கு முன்பாகவே தபால் மூல வாக்குகளில் பல மோசடிகள் நடக்கும் என ட்ரம்ப் அவர்கள் கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.    எலக்ரோரல்  கொலீச் கடந்த 14ம் திகதி திரு ஜோ பைடன் அவர்களை தெரிவு செய்யப்பட்ட  ஜனாதிபதியாக அறிவித்துள்ளதோடு, பல நீதிமன்றங்கள் ஜனாதிபதி ட்ரம்பின் சடடத்தரணிகளால் தொடுக்கப்படட வழக்குகளை தள்ளுபடி செய்தும் நிராகரித்துமுள்ளனர், ஆனாலும் இதுவரை எந்த முடிவுக்கும் எவராலும் வரமுடியவில்லை. ஜனவரி 6ம் திகதி எலக்ரோரல்  கொலீச்சினால் அனுப்பப்படும் அத்தாட்சிப் பாத்திரங்கள் கொங்கிரஸ் சபையால் அங்கி கரிக்கப்படவேண்டும். அங்கு எதிர்க்கப்படும்போது என்ன நடைபெறும் என அறிந்துகொள்ள அமெரிக்க நாட்டின் யாப்பினை நாம் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

அமெரிக்க நீதிமன்றங்கள் நீதியை கடைப்பிடித்திருக்குமானால் இந்த ஒரு மாதத்திற்குள் பிரச்சினை தீர்ந்திருக்கும் ஆனால் நீதிபதிகள் பக்கசார்பு உள்ளவர்களாகவும் நாட்டின் யாப்பு விதிகளுக்கு அமைய நீதி செலுத்தாமல் தாம் ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு சார்பாகவும் தம் மனப்போக்கின்படியும் நியாயம் தீர்த்தனர். சகல நீதிமன்றங்களிலும் “லேடி யஸ்ரிஸ் ” (Lady justice) சிலையை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அந்தச்சிலையின் கண்கள் கட்டப்பட்டிருப்பதையும் ஒரு கையில் தராசும் மறு  கையில் ஒரு வாழும் வைத்திருப்பதை அவதானித்திருப்பீர்கள்.  கண்கள் கட்டி மறைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் என்னவெனில் எதிரில் நிற்பவர்கள் கறுப்பா சிவப்பா, பணக்காரனா பிச்சைக்காரனா, உயர்ந்தவனா தாழ்ந்தவனா என்ற எந்த பாகுபாடுமின்றி நீதி செலுத்துவதற்கே. முற்காலத்தில் வியாபாரிகள் நிறுவைக்காக கற்களை பாவித்தனர், ஒரு பக்கத்தில் நிறுவைக் கல்லும் மறு  பக்கத்தில்  பொருளையும் வைத்து நிறுத்தனர். சில கற்களில் மறைவாக ஓட்டைகள் போட்டு பாரத்தைக் குறைத்தும் சில கற்களில் மறைவாக பாரத்தை ஏற்றியும் பாவித்தனர். இவர்கள் பொருட்களை வாங்கும்போது பாரம் கூடிய  கல்லை வைத்தும், பொருட்களை விற்கும்போது பாரம் குறைந்த ஓட்டைக் கற்களை  வைத்தும் வியாபாரம் பண்ணினார்கள். இங்கே பாவிக்கப்படட தராசு கள்ளத் தராசாகும் இதேபோன்றே இன்றைய அமெரிக்க நீதிமன்றங்கள் கள்ளத் தராசுகளாக  மாறியுள்ளன. இங்கே கற்கள் அரசியல்வாதிகள், எந்தக் கல்லை பாவிக்கவேண்டுமென்று தீர்மானிப்பவர்கள் சட்டத்துறையை சேர்ந்த  அதிகாரமிக்க நீதிபதிகளும் வழக்கறிஞ்யர்களும், கள்ளத்தராசு நீதிமன்றங்களாகும் .  இந்த நீதிமன்றங்கள் தடம் புரண்டாலும் நீதியின் பயணம் தொடரக்கூடியதாக மிகக் கூர்மையாக தூர நோக்கோடு உருவாக்கப்பட் டதுதான்  அமெரிக்க அரசியல் யாப்பு.  

1776 ல் அமெரிக்க சிவில் யுத்தத்தின் முடிவில் மூதாதையர்களினால் மனச்சுத்தியோடு சகல மாநிலங்களும் சம உரிமையோடும் ஐக்கியத்தோடும் ஆட்சிசெய்யப்படவேண்டும் என்ற நோக்கத்தோடு புத்திசாதூர்யமாக உருவாக்கப்பட் டதுதான்  அமெரிக்க நாட்டின் யாப்பு. இரத்தம் சிந்தி தியாகம் செய்து பல காரியங்களை இழந்து சுதந்திரம் பெற்றவர்களுக்கே பெற்ற சுதந்திரத்தை எப்படி பாதுகாக்க முடியும் என்பது புரியும். அப்படிப்படடவர்களாலேயே அமேரிக்க அரசியல் யாப்பு (constitution) உருவாக்கப்பட்டது.  

ஜனாதிபதி தெரிவு சம்பந்தமாக கொங்கிரஸ் (Congress) சபையின் அதிகாரங்கள்பற்றி பார்ப்பதற்கு முன்பாக அரசியலமைப்பையும் அதன்  நடைமுறைகள், அதிகாரங்கள் பற்றியும் அறிந்துகொள்வது நலமாயிருக்கும்.  ஐம்பது மாநிலங்கள் ஒன்றுசேர்ந்து அமைக்கப்பட்டதே ஐக்கிய அமேரிக்க நாடாகும், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இரு செனேட்டர்கள் senators தெரிவு செய்யப்பட்டு ஐம்பது மாநிலங்களுக்குமாக 100 செனேட்டர்கள் செனற்சபையில் அங்கம் வகிப்பார்கள்.  சில மாநிலங்கள் மிகசிறிதாயும் சில மாநிலங்கள் மிகப்பெரிதாகவும் ஒன்றுக்கொன்று சனத்தொகை மாறுபடுவதால், சனத்தொகைக்கேற்ப்ப மாவட்ட ங்களின் எண்ணிக்கை மாறுபடும், உதாரணமாக கலிபோனியா மாநிலம்  55 மாவட்டங்களையும், நியூயோர்க் 29 மாவட்டங்களையும், இந்தியானா 11 மாவட்டங்களையும் கொண்டுள்ளன, பதினொரு மாவட்டங்கள் நாலும், நான்கிற்கும் கீழான  எண்ணிக்கையான மாவட்டங்களையும்  கொண்டுள்ளன.  இந்த எண்ணிக்கைக்கேற்ப பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர். கலிபோர்னியாவில் 55 மாவட்டங்கள் இருப்பதால் 55 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவர் 3 மாவட்டங்கள் உள்ள மாநிலங்களில் 3 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவர். இப்படியாக 435 பிரதிநிதிகள், ஐம்பது மாநிலங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்டு அமைக்கப்படுவதே பிரதிநிதிகள் சபை என்று அழைக்கப்படும். இந்த 435 பேர் கொண்ட  பிரதிநிதிகள் சபையையும் (House of Representatives )  100 பேர் கொண்ட செனேட்சபையையும் (Senate) சேர்த்து “கொங்கிரஸ்” (Congress) என அழைப்பர்.

சகல சட்டங்களையும் தீர்மானங்களையும் உருவாக்குவதும், இல்லாமல் செய்வதும் இவர்களே.   இந்தக் கொங்கிரஸினால் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட சகல சட்டதிட்டங்களையும்  நிறைவேற்றும் அதிகாரம் ஜனாதிபதியின் கையில் இருக்கும். மேலும் ஒரு சட்டம் அல்லது ஒரு தீர்மானம் எப்படி உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வருகின்றதென்பதை இப்போது பார்ப்போம்.

ஒரு மனிதனிடம் தோன்றும் எண்ணங்களே இறுதியில் சட்டமாக உருப்பெறுகிறது, அது நீங்களாகக்கூட இருக்கலாம். அந்த எண்ணம் ஒரு பிரதிநிதிகள் சபை அங்கத்துவரிடமோ அல்லது ஒரு செனேட்டரிடமோ கொடுக்கப்படவேண்டும், அதை அவர் எழுத்துவடிவத்தில் “கவுஸ் ” ல் உள்ள கொப்பர் (Copper) என்று அழைக்கப்படும் பெட்டியில் போடுவார். இப்போது போடப்பட்ட இந்தப் பிரேரணை ஆங்கிலத்தில் (bill) என அழைக்கப்படும். கொடுக்கப்பட்ட பிரேரணையை பல குழுக்களாகச் சேர்ந்து விவாதித்து நீக்கவேண்டியதை நீக்கி சேர்க்கவேண்டியவற்றைச் சேர்த்து வாக்கெடுப்பிற்கு விடுவார்கள்,  வெற்றியடைந்தால் செனேட்  சபையிடம் கையளிக்கப்படும், அங்கேயும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு கொங்கிரஸிலுள்ள இரு சபைகளாலும் அங்கிகரிக்கப்படால் அது சட்டமாக நிறைவேறும் இல்லையென்றால் நீக்கப்பட்டுவிடும்.

இந்த நடைமுறைகளின் பின்பே ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும். அவர் அதை ஏற்றுக்கொண்டால் அது சட்டமாகும்  இல்லை என்றால் அது சட்டமாகாது . இங்கேயே ஜனாதிபதி தனது  வீட்டொ (VETO) அதிகாரத்தை பிரயோசனப்படுத்துவார். வீட்டொ அதிகாரம் பிரயோகிக்கப்படடால் பின்பு மறுபடியும் கொங்கிரஸில் மூண்டில் இரண்டு பங்கு வாக்குகளினால் நிறைவேறினால் மட்டுமே அது கட்டாயமாக சட்டமாக்கப்படும் ஜனாதிபதியால் ஒன்றும் செய்ய முடியாது.     

ஜனாதிபதி தெரிவு பற்றிப் பார்க்கும்போது சிறிது வித்தியாசமான நடைமுறை காணப்படுகின்றது. எலெக்ரோரல் கொலிச்சை கடந்து, மாநில நீதிமன்றங்களையும்  கடந்து, அதி உயர் நீதிமன்றமும் ஜோ பைடனே ஜனாதிபதி என்று தெரிவித்தால்கூட, ஜனாதிபதி ட்ரம்ப் ஒத்துக்கொள்ளாவிட்டால் (CONCEDE) கொன்சிட் பண்ணாவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது.  இறுதியில் செனட் சபையிடமேயே கையளிக்கப்படும். அப்போது 100 செனேட்டர்களில் ஒரு மாநிலத்திற்கு ஒருவராக 50 செனேட்டர்களே வாக்களிக்க முடியும். அங்கு எவர் வெற்றி பெறுகிறாரோ அவரே ஜனாதிபதியாவார். ஜோ பைடன் அவர்கள் அனேக எலக்ரோரல் வாக்குகளை பெற்றதாக அறிவிக்கப்பட் டாலும் அநேக மாநிலங்களில் ட்ரம்ப் அவர்களே வெற்றியீ ட்டியுள்ளார் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும். ஜனவரி 20ம் திகதியே அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது உறுதியாகும்.

மேலும் முடிவாக இன்னுமொரு சாத்தியக்கூறை நாம் தவிர்க்க முடியாது. இந்தத் தேர்தல் காலத்தில் பல வெளிநாட்டு உளவு ஸ்தாபனங்கள் அமெரிக்காவின் முக்கிய அரசாங்க மற்றும் தனியார் ஸ்தாபனங்களை ஊடறுப்பு  செய்து திருட்டுத்தனம் செய்தது நிரூபணமாகியுள்ளது.  வாக்குகளை எண்ணும் டொமினியன் இயந்திரங்கள் சைனாவோடு சம்பத்தப்பட்ட தொழிற்சாலைகளால் உருவாக்கப்பட்டதும் வெளிநாட்டுச் சக்திகள் இயக்கக கூடியதாகவும் உருவாக்கப்பட்டதாக  செய்திகள் வெளிவந்துள்ளன. அத்தோடு டொமினியன் கணனி இயந்திரங்களுக்கு தடுப்புச் சுவர்கள் இருந்த போதிலும் பின்வாசல் இருந்ததாகவும் பேச்சு அடிபடுகின்றது. இந்த வெளி நாடுகளின் ஊடுருவலை காரணம் காட்டி  எந்த நேரத்திலும் அவசர கால சட்டத்தை ஜனாதிபதியால் அமுல்படுத்த முடியும்.  அவசரகால சட்டத்தின் கீழ் இந்த இயந்திரங்களைக் கைப்பற்றி முளுப்பரிசோதனைக்கு  அனுப்பி பல குளறுபடிகளையம் கையாடல்களையும் வெளிச்சத்திற்கு கொண்டுவர முடியும், அதன்மூலம்  சர்ச்சைக்குரிய மாநிலங்களில் மீண்டும் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது . அந்தச் சூழ்நிலையில் கலவரம் நடைபெறுமாயின் மார்சல் சட்டத்தைக்கூட அமுல் படுத்தலாம். மார்சல் சட்டம்  அமுல்படுத்தப்பட்டால் ஜனாதிபதி மட்டுமே சகல உரிமையோடும் ஆட்சி செய்வார். அடுத்து வரும் மூன்று வாரங்கள் மிக முக்கியமானதும் ஊகிக்க முடியாததுமாக இருக்கின்றது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *