முல்லைத்தீவு நகருக்குள் கூடுதலாக பஸ்கள் வருகை தருவதன் மூலம் பொதுமக்கள் சந்தை இணை பயன்படுத்திக்கொள்ள முடியும் என கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் இமக்குலேற்ரா புஷ்ப ஆனந்தன் தெரிவித்தார் .
மேலும் அவர் தெரிவிக்கையில் கடந்த பத்தாண்டுகளில் முல்லைத்தீவு நகருக்குள் பேருந்துகள் வருகை தருவதில் ஒழுங்கின்மை காணப்படுகிறது பேருந்துகள் வருகை தராத நாட்களை கூடுதலாக இங்கு உள்ளது. 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை தீவில் நகரத்தில் பேருந்து தரித்து நின்றது பொதுமக்கள் சந்தை உட்பட பல்வேறு தேவைகளை நிறைவு செய்த பின்னர் பஸ்களில் ஏறி பயணித்தனர் . ஆனால் தற்போது மாவட்ட செயலகத்தில் இருந்து அருகில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது நகரத்தில் மக்கள் செல்வதற்கு 300க்கும் அதிகமான மீட்டர்கள் நடந்து செல்லவேண்டும் இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது என தெரிவித்துள்ளார் காணப்படுகிறது.