மூன்றாவது முறையாகவும் வென்றார் ஜஸ்டின் ட்ரூடோ…

மூன்றாவது முறையாகவும் வென்றார் ஜஸ்டின் ட்ரூடோ…

கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக அந் நாட்டுச் செய்திச் சேவையான சி.பி.சி. தெரிவித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ட்ரூடா மூன்றாவது முறையாகவும் தொடர்ச்சியாக கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்தல் வெற்றிகள் இன்னும் உறுதிபடுத்தப்படாத நிலையில், அதிகாரிகள் தொடர்ந்தும் வாக்குகளை கணக்கிட்டு வருகின்றனர் .

சி.பி.சி. செய்திச் சேவை திங்கள்கிழமை தாமதமாக, லிபரல் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று அறிவித்தது. எனினும் சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்படுமா அல்லது பெரும்பான்மை அரசங்கம் அமைக்கப்படுமா என்பதை தெளிவாக கூறவில்லை. இதனிடையே பல கனேடிய ஊடகங்கள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளது. கனேடிய நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கட்சி பெரும்பான்மையை வெல்ல 338 இடங்களில் 170 இடங்களைப் பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *