ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தற்போதைய நடவடிக்கைகள் அவரது அதிகாரம் முடியும் காலத்தில் அவருக்கு பிரச்சினையாக அமையும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவை குற்றவாளியாக கருதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை வௌியிட்டுள்ளமை குறித்து கருத்து வௌியிடுகையிலேயே கட்சியின் முக்கியஸ்தர் திலங்க சுமதிபால மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன உயிர்த்தஞாயிறு தாக்குதலில் குற்றவாளி என்றால் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா மற்றும் மகிந்தவும் குற்றவாளிகளே.
ஏனெனில் சந்திரிக்கா மற்றும் மஹிந்த ஆகியோர் ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்திலும் நாட்டில் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதால் அவர்களும் குற்றவாளிகளாக பெயரிடப்பட வேண்டும்
அத்துடன் ஶ்ரீலங்கா சுந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை நிராகரிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.