இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த விமானப் பயணிகளுக்கு அனுமதி வழங்குதில்லை என ஜப்பானிய அரசு முடிவு செய்துள்ளது. தென்னாசிய பிராந்தியத்தில் கொவிட் 19 தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இலங்கை தவிர தடை செய்யப்பட்டஏனைய நாடுகள் பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகும். இந்த தடை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) முதல் அமுலுக்கு வரும்.
எனினும், இந்த தடை சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள ஜப்பானிய நாட்டினருக்கு பொருந்தாது, மேலும் அவர்கள் ஜப்பானுக்கு வந்ததும் ஆறு நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்.அந்தக் காலத்தில் 3 மற்றும் 6 ஆம் நாட்களில், அவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை அறிய சோதனைகள் நடத்தப்படும்.
கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி இந்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மேலும் தொற்றுநோய் மீண்டும் அதிகரித்திருந்தாலும், ஜூலை மாதம் ஒலிம்பிக்கைத் நடத்த ஜப்பான் தயாராகி வருகிறது. இந்தப் டோக்கியோ நகரத்தில் நடத்தப்படவுள்ளது., எனினும், டோக்கியோ நகரம் ஏற்கனவே முடக்கல் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.