யாழில் ஊடகவியலாளர் மீது சரமாரித் தாக்குதல்!

யாழில் ஊடகவியலாளர் மீது சரமாரித் தாக்குதல்!

கச்சாய் வீதியில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதல் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கச்சாய் வீதி மின்சாரசபையை அண்மித்த பகுதியிலேயே இன்று  மதியம் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளர் மீது வானில் வந்தோர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பித்துச் சென்றிருப்பதாக சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரியைச் சேர்ந்த தவராசா சுபேசன் என்ற 27வயதான ஊடகவியலாளரே முகம் மற்றும் கைகளில் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்ட பின்னர் கச்சாய் வீதி ஊடாக சென்ற ஊடகவியலாளரை மோதிக் காயப்படுத்தும் வகையில் வான் ஒன்று ஊடகவியலாளர் பயணித்த மோட்டார் சைக்கிளின் முன்பாக நிறுத்தப்பட்டுள்ளது.

பின்னர் வானில் இருந்தவர்களில் ஒருவர் பொல்லு மற்றும் கல் ஆகியவற்றால் ஊடகவியலாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு வானில் ஏறி தப்பித்துச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *