யாழ் பல்கலை தீவிர கண்காணிப்புக்குள் பொலிஸார் குவிப்பு

யாழ் பல்கலை தீவிர கண்காணிப்புக்குள் பொலிஸார் குவிப்பு

பல்கலைக்கழகம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், பல்கலைக்கழகத்தைச் சுற்றி படையினர் மற்றும் பொலிஸார் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இன்றைய தினம் யாழ். பல்கலைக்கழத்தினுள் மாணவர்கள் நினைவேந்தலில் ஈடுபடலாம் எனப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதனால் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் எழுந்துள்ள கோவிட் பெருந்தொற்று நிலமைகளை அடுத்து, இம்மாதத் தொடக்கத்தில் இருந்து, நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் அத்தியாவசியப் பரீட்சை செயற்பாடுகள், ஆய்வு நடவடிக்கைகள் தவிர மாணவர்கள் உள் நுழைவு தடுக்கப்பட்டிருந்தது. ஆயினும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.எனினும் பலகலைக்கழகத்தினுள் மாணவர்கள் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை செய்வதற்குத் தயாராகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளமையினால் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகத்தைச் சுற்றி இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், தீவிர கண்காணிப்பை மீறிச் செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *