யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்ட செய்தியை கேட்டு மனம் உடைந்து விட்டதாக கனடா வெளிவிவகார அமைச்சர் François-Philippe Champagne தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த நினைவுத் தூபி கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதன் போது பல்கலைக்கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
குறித்த நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், இடித்தழிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீளவும் அதே இடத்தில் கட்டியெழுப்பும் நோக்கில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, கனடா வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். “நல்லிணக்கத்தை நோக்கி நகர்வதற்கு நினைவுச் சின்னம் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.