யுத்தம் இடம்பெற்றிருந்த நிலையில்  ஆயிரக்கணக்கான பொது மக்கள் காணாமல் போயிருந்தனர்.

யுத்தம் இடம்பெற்றிருந்த நிலையில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் காணாமல் போயிருந்தனர்.

உண்மை மற்றும் நீதிக்காக போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆர்ஜென்டினா மற்றும் பிராந்தியத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (HRC) இலங்கை குறித்த தீர்மானத்தை நிறைவேற்ற அழைப்பு விடுத்துள்ளன.

கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த சிவில் அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளன. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“1983 மற்றும் 2009க்கு இடையிலான காலப்பகுதியில் இலங்கை ஒரு நீண்ட உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றிருந்த நிலையில், இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் காணாமல் போயிருந்தனர்.

2015ம் ஆண்டில் கடுமையான மனித மீறல்களை விசாரிப்பதற்கான ஒரு பொறிமுறையை நிறுவுவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை உறுதியளித்திருந்தது.

எவ்வாறாயினும், புதிய அரசாங்கம் இந்த உறுதிப்பாட்டை மாற்றியமைத்ததுள்ளது.

மேலும் தற்போது இலங்கையில் மனித உரிமை நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது, ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆயுத மோதல் முடிவடைந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகும், பாதிக்கப்பட்டவர்கள் நீதியற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

அமைப்புகள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட நாட்டின் மனித உரிமை நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவது ஆபத்தானது.

மேலும் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இந்த மனித உரிமை நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான வலுவான அணுகுமுறையை செயற்படுத்த வேண்டும் என குறித்த சிவில் அமைப்புகள் கோரியுள்ளன.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *