யேமனின் ஏடன் விமான நிலையத்தில் குண்டுத்தாக்குதல்! 13 பேர் பலி

யேமனின் ஏடன் விமான நிலையத்தில் குண்டுத்தாக்குதல்! 13 பேர் பலி

யேமனின் ஏடன் விமான நிலையத்தில் விமானமொன்று தரையிறங்கிய வேளை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சவுதிஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுடன் விமானம் தரையிறங்கிய வேளை விமான நிலையத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மயீன் அப்துல்மலிக் உட்பட அமைச்சர்களும் சவுதி தூதுவரும் பாதுகாப்பாக ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விமான நிலையத்தில் தாக்குதல் இடம்பெற்றவேளை துப்பாக்கிப் பிரயோக சத்தங்களும் பாரிய வெடிப்பு சத்தங்களும் கேட்டதாகவும், அதன் பின்பும் அங்கு வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமான நிலைய கட்டிடத்திற்கு அருகில் மூன்று எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் 13 கொல்லப்பட்டுள்ளனர் 17 பேர் மருத்துசவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாங்களும் அரசாங்க உறுப்பினர்களும் தற்காலிக தலைநகரான ஏடனில் பாதுகாப்பாக உள்ளோம் என பிரதமர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.இந்தக் கோழைத்தனமான தாக்குதல் யேமன் அரசாங்கத்தின் மீதான தாக்குதல்களில் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *