ரஷ்யாவில் பல கிலோமீட்டர் காத்திருத்த மக்கள்! பேரதிர்ச்சி கொடுத்த விற்பனையாளர்கள்

ரஷ்யாவில் பல கிலோமீட்டர் காத்திருத்த மக்கள்! பேரதிர்ச்சி கொடுத்த விற்பனையாளர்கள்

உக்ரைன் மீது ரஷ்யா 19 வது நாளாக தொடர்ந்து  கடுமையான தாக்குதலை தொடர்ந்து வருகின்றது. உலக நாடுகளின் எச்சரிக்கை, பொருளாதார தடை என அனைத்தையும் மீறி ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்பை தொடர்ந்து வருவதால், பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் அதனுடனான வணிக தொடர்பை துண்டித்து வருகின்றன.

பெப்ஸி, கோக்க கோலா, மெக்டோனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களின் வணிக செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளன.

ரஷ்யாவில் மெக்டோனால்ட்ஸ் பர்கர் பிரியர்கள் ஏராளம். தற்போது ரஷ்யாவில் மெக்டோனால்ட்ஸ் கடைகள் மூட உள்ளதை வைத்து ஆன்லைனில் புதுப்புது வியாபார தந்திரங்கள் வலம் வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைமை நிர்வாக அதிகாரியான கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி அப்பாவி மக்களுக்கு சொல்ல முடியாத துன்பத்தை ஏற்படுத்திய ரஷ்யாவில் உள்ள அனைத்து மெக்டோனால்ட்ஸ் கடைகளையும் மூடுவதாக அறிவித்தார்.இதுதொடர்பில் அவர் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில்,“”ஒரு அமைப்பாக, ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறையைக் கண்டிப்பதிலும், அமைதிக்காக பிரார்த்தனை செய்வதிலும் உலகத்துடன் இணைகிறோம். இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களுடைய முன்னுரிமை மக்கள் பக்கம் நிற்பதே” என்ற வரிகள் ட்விட்டரிலும் வேகமாக பகிரப்பட்டன.

McDonald’s ரஷ்யாவில் உள்ள தனது 850 உணவகங்களையும் தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தவுடன், கடைசியாக ஒருமுறை அதன் ருசியை அனுபவிக்க வேண்டுமென ரஷ்யர்கள் துடியாய் துடித்து வருகின்றனர்.

இதற்காக மெக்டோனால்ட்ஸ் கடை வாசலில் மணிக்கணக்கில் காரில் காத்துகிடக்கின்றனர். இதனை தவிர்த்து ஆன்லைனில் ஆர்டர் செய்து ஆசை தீர சாப்பிடலாம் என காத்திருப்பவர்களுக்கு விற்பனையாளர்கள் பேரதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் கண்களைக் கவரும் விலைகளில் மெக்டொனால்டு உணவான டபுள் பிக் மேக், டபுள் ராயல், இரண்டு பெரிய சிப்ஸ்கள், 18 மெக்நகெட்ஸ் மற்றும் மொஸரெல்லா டிப்பர்கள் – உணவு ‘இன்னும் சூடாக’ இருப்பதாகக் கூறி விதவிதமான விளம்பரங்கள் ஆன்லைனில் வைரலாகி வருகின்றன.

ஆனால் அதன் விலையை பார்த்தால் தான் தூக்கி வாரிப்போடுகிறது. மூன்று அல்லது நான்கு பர்கர்களின் அடுக்கை கொண்ட செட்டின் விலை 40,000 ரூபிள், அதாவது இந்திய மதிப்பில் 26 ஆயிரம் ஆகும். பெயரிடப்படாத இரண்டு சீல் செய்யப்பட்ட பைகளில் உள்ள மெக்டோனால்ட்ஸ் உணவின் விலை 50 ஆயிரம் ரூபிள், அதாவது இந்திய மதிப்பில் 33,400 ரூபாய் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துடன் ஒரு கோகோ கோலாவை ஆர்டர் செய்ய நினைத்தால் எக்ஸ்ட்ராவாக ஆயிரம் ரூபாய் (1,500 ரூபிள்) தேவைப்படும். இந்திய மக்கள் மூன்று பெட்ரூம்களைக் கொண்ட ஒரு வீட்டிற்கு ஒரு மாதம் செலுத்த வேண்டிய வாடகை தொகை அளவிற்கு ஒரு பர்க்கரை வாங்கி ரஷ்ய மக்கள் சாப்பிட்டு வருவது பெரும் விமர்சனங்களை உருவாக்கி வருகிறது.ஒருபுறம் உக்ரைன் பற்றி எரிகிறது. ரஷ்யாவிலே பர்கர் மற்றும் கோக்கிற்காக பல கிலோ மீட்டருக்கு மக்கள் காத்திருக்கும் அவலம் அரங்கேறி வருவது சோசியல் மீடியாவில் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *