சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய சந்தையில் மார்ச் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போனின் கேமரா அதிகளவு அப்டேட் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களில் அதிக ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் FHD+LCD ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 64 எம்பி பிரைமரி சென்சாருடன் குவாட் கேமரா சிஸ்டம், 5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி மாடலில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முந்தைய நோட் 9 சீரிஸ் போன்றே ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்பது தற்சமயம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.