டி20 உலகக் கோப்பையில் வங்க தேசத்திற்கு எதிரான சூப்பர் 12 சுற்று போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.அபுதாபியில் தொடங்கிய போட்டியில் குரூப் 1ல் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா அணியும், அரையிறுதி வாய்ப்பை இழந்த வங்க தேச அணியும் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த வங்க தேச அணி மளமளவென அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 84 ரன்களுக்கு சுருண்டது. முகமது நைம் (9), லிட்டன் தாஸ் (24), சௌமியா சர்க்கார் (0), முஷ்பிகுர் ரஹீம் (0), மஹ்முதுல்லா (3), அஃபிஃப் ஹொசைன் (0), ஷமிம் ஹொசைன் (11), மஹேதி ஹசன் (27), தஸ்கின் அகமது (3), நசும் அகமது (0) ரன்களில் அவுட்டாகினர். வங்க தேச அணியில் 4 பேர் டக் அவுட்டாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா, Nortje தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர், ஷம்சி 2 விக்கெட்டுகளையும், Pretorius 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 13.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்க தேசத்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றி, 1 தோல்வி என 6 புள்ளிகளுடன் குரூப் 1 புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.