வயோதிபர்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலொன்று சிக்கியது!

வயோதிபர்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலொன்று சிக்கியது!

யாழ்ப்பாணத்தில் வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிடும் கும்பலின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து 18 பவுண் தங்கநகைகள், காசு மற்றும் வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.அத்துடன் சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கி விற்றமை மற்றும் அடகு பிடித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பூசகர் ஒருவரின் வீட்டுக்குள் சமையல் அறை புகைக் கூண்டு ஊடாக நுழைந்த கொள்ளையர்கள் வாள்களைக் காண்பித்து மிரட்டி நகைகள் மற்றும் பணம் போன்றவற்றை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.அந்த கொள்ளை உட்பட கந்தரோடை, நல்லூர், கந்தர்மடம் என நான்கு இடங்களில் முதியவர்களை மிரட்டி கொள்ளையிட்ட கும்பலின் பிரதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நல்லூரைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன். அவரிடமிருந்து கொள்ளையிட்ட நகைகளை வாங்கியமை, விற்றுக் கொடுத்தமை மற்றும் அடகு பிடித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதையடுத்து குறித்த சந்தேக நபர்கள் 7 பேரும் யாழ். பொலிஸாரிடம் முற்படுத்தப்பட்டுள்ளனர்.யாழ். மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான அணி இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *