வாரஇறுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை- சவேந்திரசில்வா

வாரஇறுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை- சவேந்திரசில்வா

வாரஇறுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். எனினும் மாகாண சபைகளுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் தளர்த்தப்பட்ட போக்குவரத்து கட்டு;ப்பாடுகளை பொதுமக்கள் துஸ்பிரயோகம் செய்தால் திருமணம் மற்றும் ஏனைய நிகழ்வுகளின் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலையேற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
திருமண நிகழ்வொன்றில் 150 பேர் மாத்திரமே கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதனை விட அதிகளவானவர்கள் திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றனர் என அவர் குறிபட்பிடடுள்ளார்.
தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள் துஸ்பிரயோகம் செய்தமையின் காரணமாகவே கடந்தகாலங்களில் வைரஸ் பரவியது என சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். பல பகுதிகளில் டெல்டா கொரோனா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்என தெரிவித்துள்ள சவேந்திரசில்வா உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றவேண்டியது பொதுமக்களின் கடமை என அவர் தெரிவித்துள்ளார்.
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *