துறைமுக, புகையிரத, பெற்றோலியம், மத்திய வங்கி, தபால் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட 12 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில், இலங்கை துறைமுக அதிகாரசபையின் அனைத்து எரிபொருட்களின் விநியோகம் மற்றும் செயற்பாடு , இலங்கை புகையிரதத்தின் சரக்கு போக்குவரத்து, இலங்கை போக்குவரத்து சபையினால் மேற்கொள்ளப்படும் பொது போக்குவரத்து சேவைகள் தொடர்பில் இவ்வர்த்தமானி அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் அனைத்து கள மட்ட உத்தியோகத்தர்கள் உட்பட விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள் மற்றும் மத்திய உட்பட அரச வங்கி மற்றும் காப்புறுதி சேவைகள் மூலம் மேற்கொள்ளப்படும் அல்லது மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து சேவைகளும். அத்தியாவசிய சேவையாக கருதப்படும்.