விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் 27 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டங்களில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் எதிர்க்கட்சியினரும், தொழிற் சங்கத்தினரும் இன்று போராட்டம் நடத்தினர்.
10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினரும், விவசாயிகள் சங்கத்தினரும் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறிப்பாக சென்னையில சைதாப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட 27 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கிடையே இன்று காலை சென்னையில் உள்ள 36 போக்குவரத்து பணிமனைகள் முன்பும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முழு அடைப்பு காரணமாக தமிழகம் முழுவதும் 1 இலட்சம் பொலிஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருவதோடு, சென்னையில் மாத்திரம் 10 ஆயிரம் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.