வெடித்துச் சிதறிய தொழிற்சாலை: இடிபாடுகளில் சிக்கி 8 பேர் பலி

வெடித்துச் சிதறிய தொழிற்சாலை: இடிபாடுகளில் சிக்கி 8 பேர் பலி

பாகிஸ்தானில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில் தெரிவித்துள்ள விடயம்,

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள தொழிற்பேட்டையில் ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்ததுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த தொழிற்சாலையில் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் தொழிற்சாலைக்குள் இருந்த பாய்லர் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததை போல அந்த பகுதியே அதிர்ந்தது.

பாய்லர் வெடித்து சிதறியதில் தொழிற்சாலை கட்டிடம் முற்றிலுமாக இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் பல தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

மேலும் இந்த வெடிவிபத்தில் ஐஸ்கட்டி தொழிற்சாலைக்கு அருகில் உள்ள மேலும் 2 தொழிற்சாலைகள் பலத்த சேதமடைந்தன. இதற்கிடையில் விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் கட்டிட இடிபாடுகளில் இருந்து 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *