கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள கூரூஜர் தேசிய பூங்காவும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.பொதுமக்கள் பூங்காவுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், பூங்காவுக்கு செல்லும் சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில், சாலைகள் வாகனங்கள் வெறிச்சோடி காணப்படுவதால் கூரூஜர் தேசிய பூங்காவில் உள்ள வன விலங்குகள் எந்த வித பதற்றமும் இன்றி சாலைகளில் அங்கும் இங்கும் செல்கின்றன.
அந்த வகையில்,நேற்று முன்தினம் 10-க்கும் மேற்பட்ட சிங்கங்கள் பூங்காவில் உள்ள சாலையில் படுத்து ஓய்வெடுத்தன. இதை, அப்பூங்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் தங்கள் செல்போன்களில் புகைப்படங்களாக எடுத்துள்ளனர்.ஊரடங்கால் பூங்கா சாலைகள் எந்த வித வாகனமும் செல்லாமல் சிங்கங்கள் எந்த வித இடையூறும் இன்றி நிம்மதியாக ஓய்வெடுப்பது போன்று வெளியான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றன