தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுமந்திரன் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயத்தினை மேற்கொண்டு வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் யமுனாநந்தா மற்றும் வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடியதோடு வைத்தியசாலையில் தற்போது நிலவும் ஆளணி பற்றாக்குறை, வைத்திய உபகரண குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.அத்துடன் வைத்திய சாலை விடுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.