141 கோடியாக உயர்ந்தது சீனாவின் மக்கள்தொகை

141 கோடியாக உயர்ந்தது சீனாவின் மக்கள்தொகை

உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை நாடு சீனா. அந்த நாட்டில் கடந்த ஆண்டின் இறுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கி நடந்தது. இதில் அதன் மக்கள் தொகை 141 கோடி என தெரிய வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அங்கு மக்கள் தொகை 7 கோடியே 20 லட்சம் உயர்ந்துள்ளது. இங்கு வருடாந்திர மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.53 சதவீதமாக குறைந்து இருப்பது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.சீன தலைவர்கள் கடந்த 1980-களில் இருந்து மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் மக்கள்வளர்ச்சி விகிதம் குறைந்த நிலையில், உழைக்கும் வயது மக்கள் தொகை மிக வேகமாக வீழ்ச்சி அடைந்து வருவதாகவும், இது வளமான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை சீர்குலைப்பதாகவும் கவலை எழுந்துள்ளது. சீனாவில் அதிகவிலைவாசி, வீட்டுவசதி பிரச்சினைகள், பெண்கள் எதிர்கொள்ளும் வேலைப்பாகுபாடு உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் குழந்தைப்பேற்றை தள்ளிப்போடுவது குறிப்பிடத்தக்கது.இப்போது மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்து விட்டதால் அங்கு தம்பதியர் குழந்தைகள் பெறுவதற்கான நடவடிக்கைகளை அதிகரிக்கவும், மக்கள் தொகை வளர்ச்சியை தவிர்க்கவும் ஜின்பிங் அரசுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *