ஜேர்மனியில் கோவிட்-19 தொற்றுகள் அதிகரித்து வருவதால், வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை திரும்ப கொண்டுவருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் ஜேர்மனியின் தடுப்பூசி விகிதம் வெறும் 67 சதவீதமாக இருப்பதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், இன்னும் அதிகமான மக்கள் கோவிட் தொற்று மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (RKI) சுகாதார நிறுவனப்படி, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 100,000 பேரில் 289 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம், ஐரோப்பாவின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜேர்மனியில் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்த தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஜேர்மனியில் தற்போது மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியான சாக்சோனி மாநில முதல்வர் மைக்கேல் க்ரெட்ச்மெர், “வரவிருக்கும் அலையானது முந்தைய அனைத்து அலைகளைக் காட்டிலும் மிக பயங்கரமாகஇருக்கும்” என தெரிவித்துள்ளார்.
வரைவு திட்டத்தின் கீழ், ஜேர்மனியில் உள்ள முதலாளிகள், அலுவலகத்திற்கு வருவதற்கு கட்டாயமான வணிகக் காரணம் இல்லாத நிலையில், தொழிலாளிகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் விருப்பத்தை வழங்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்.ஏனெனில், வேலைக்கு செல்லும் எவரும், தங்கள் தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரத்தை கேட்கப்படுவார்கள், அல்லது எதிராமரையான சோதனை முடிவுகளைக் கொண்டஆவணத்தை கேட்கப்படுவார்கள்.அதே சமயம், வரவிருக்கும் புதிய கூட்டாட்சி அரசாங்கம்(Social Democrats, Greens and liberal FDP) மேலும் சில புதிய நடவடிக்கைகளை கொண்டுவர உள்ளன.
அதில் Work From Home மற்றும் 3G விதிமுறைகள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன. அவர்களின் கூட்டுச் சட்டம் ஜேர்மன் பாராளுமன்றத்தின் கீழ் சபையான Bundestag-க்கு வியாழன் அன்று ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும், வெள்ளியன்று மேலவையில் கையெழுத்திடப்படும். ஜேர்மன் அரசாங்கமும் பிராந்தியத் தலைவர்களும் வியாழனன்று கிட்டத்தட்ட ஒன்றுகூடி தங்கள் பதிலை ஒருங்கிணைக்கிறார்கள்.