இந்தியாவில் கொரோனா வைரஸ்மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் 16 ம் திகதி ஆரம்பமாகவுள்ளதை இன்று இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.இந்திய பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவின் கொரோனா வைரஸ் நிலவரம் மற்றும் மருந்துவழங்கல் குறித்து சிரேஸ்ட அதிகாரிகளுடன் இன்று ஆராய்ந்துள்ளார்.அதன்பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தஅறிவிப்பை கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.அன்றைய தினம் நாடாளவிய ரீதியில் மருந்து வழங்கல் ஆரம்பமாகும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் துணிச்சலான மருத்துவர்கள் சுகாதார பணியாளர்கள்முன்னிலை பணியாளர்களிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஒருகோடி சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இரண்டுகோடி முன்னிலை பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் மருந்து வழங்கல் நடவடிக்கையில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் பின்னர் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு மருந்தினை வழங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல்கட்டமாக 30 கோடி பேரிற்கு மருந்தினை வழங்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா மருந்தினை இலவசமாக வழங்கவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.