யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 24 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி இன்று திறந்துவைக்கப்பட்டது.
இன்று காலை இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் சிறீபவானந்தராஜா மற்றும் யமுனாநந்தா ஆகியோரால் இது திறந்து வைக்கப்பட்டது.
இந்த திரவ ஒக்சிஜன் தாங்கி வட மாகாணத்திலேயே முதல் தடவையாக மத்திய சுகாதார அமைச்சினால் 24 மில்லியன் ரூபா செலவில் 10 ஆயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வைத்தியசாலைக்கு தேவையான ஒக்சிஜன் குழாய் வழி மூலமாக விடுதிகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படவுள்ளது. அத்துடன் 10 நாட்களுக்கு ஒரு முறை இதனை நிரப்பினால் போதுமானதாக இருக்கும் என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சிறீபவனாந்தராஜா தெரிவித்தார்.