30 ஆயிரம் அடி உயரத்தில் குழந்தை பெற்ற ஆப்கன் பெண்..

30 ஆயிரம் அடி உயரத்தில் குழந்தை பெற்ற ஆப்கன் பெண்..

ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற விமானம், 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்போது, அதிலிருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின் அந்நாட்டில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இவர்களுக்கு தஞ்சம் அளித்து வருகின்றன.இந்நிலையில் காபூலில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள பிர்மிங்காம் நகரம் நோக்கி, துருக்கி நாட்டு விமானம் சமீபத்தில் புறப்பட்டது.அதில் சோமன் நுாரி, 26 என்ற நிறைமாத கர்ப்பிணியும், அவரது கணவர் தாஜ் முகமது ஹம்மத், 30, ஆகியோர் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் பயணம் செய்தனர்.

மேற்காசிய நாடான குவைத் வான்வெளியில், 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்த போது, சோமன் நுாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.விமானத்தில் டாக்டர் இல்லாததால், விமான ஊழியர்கள் பிரசவம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சில நிமிட போராட்டத்துக்கு பின் அழகான பெண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தைக்கு ஹவ்வா என பெயரிடப்பட்டது.தற்காப்பு நடவடிக்கையாக குவைத்தில் தரை இறங்கிய விமானம், பின் பிர்மிங்காம் சென்றடைந்தது.சமீபத்தில் காபூலில் இருந்து ஜெர்மனி நோக்கி பயணித்த அமெரிக்க ராணுவ விமானத்திலும், கர்ப்பிணி ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *