நாட்டில் மேலும் 538 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதில் 448 திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஏனைய 21 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 985 ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 69 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 75 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 8 ஆயிரத்து 206 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 22ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 584 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 146பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.