கொழும்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட சுமார் 4 லட்சம் கொவிட் தடுப்பூசிகளில் 70,000 தடுப்பூசிகள் குறித்து எதுவித தகவல்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தின் போது இந்த தகவல் தெரியவந்துள்ளது.
நாட்டில் கொவிட் தடுப்பூசி தொடர்பான ஆவணங்கள் கணினியமப்படுத்தும் திட்டம் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கொழும்பு மாவட்டத்தின் 11 சுகாதார சேவை பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட 4 லட்சம் தடுப்பூசிகளில் 70,000 தடுப்பூசிகள் குறித்த தரவுகள் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.