ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப்பை (Donald Trump) தடைபண்ணியதைத் தொடர்ந்து, கடந்த இரு தினங்களில் ருவீற்ர் (TWITTER), மற்றும் பேஸ்புக்(FACEBOOK) ஆகிய பெரும் ஸ்தாபனங்கள் பங்குச்சந்தையில் மிகுந்த பின்னடைவை சந்திதுள்ளன. ருவீற்ர் 14 வீதத்தினாலும், பேஸ்புக் 7 வீதத்தினாலும் வீழ்ந்தன.
மேலும் ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப்பை மட்டுமல்லாது அவரது சட்ட ஆலோசகர்கள், ஆதரவாளர்கள், அவருக்குசார்பான ஊடகங்கள் எனக் கருதப்பட்ட ஸ்தாபனங்கள் ஆகியவற்றையும் தடை பண்ணியதால் நூற்றுக்கணக்கான குற்றப் பத்திரிக்கைகள் இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் அநேக நாட்டுத் தலைவர்கள் உசாரடைந்து இந்த ஸ்தாபனங்களுக்கு எதிராக தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு தங்களுடைய நாட்டிலும் இப்படியான கேவலங்கள் நடைபெறாதபடிக்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.