6ஜி வயர்லெஸ் தொழில்நுட்பம் உருவாக்க ஆப்பிள் திட்டம்

6ஜி வயர்லெஸ் தொழில்நுட்பம் உருவாக்க ஆப்பிள் திட்டம்

ஆப்பிள் நிறுவனம் 6  ஆம் தலைமுறை செல்லுலார் கனெக்டிவிட்டி அதாவது 6ஜி தொழில்நுட்பத்தில் பணியாற்ற பொறியாளர்களை பணியமர்த்தும் பணிகளை துவங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பை ஆப்பிள் தனது வலைதளத்தின் வேலைவாய்ப்பு பகுதியில் வெளியிட்டு இருக்கிறது. வயர்லெஸ் சிஸ்டம் ஆய்வு பொறியாளர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் சிலிகான் வேலி மற்றும் சான் டெய்கோ அலுவலகங்களில் பணியாற்றுவர். எதிர்கால ஆப்பிள் சாதனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அடுத்த தலைமுறை வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு எனும் தலைப்பில் ஆப்பிள் புதிய பணி பற்றி விவரிக்கிறது.

இந்த பிரிவில் பணியாற்றுவோர் 6ஜி வயர்லெஸ் தகவல் பரிமாற்ற முறைகளுக்கான ரேடியோ நெட்வொர்க்குகளை வடிவமைப்பார்கள் என ஆப்பிள் தெரிவித்து உள்ளது. 6ஜி தொழில்நுட்பம் இன்றைய தேதியில் தொலைதூர கனவு ஆகும். தற்சமயம் 5ஜி தொழில்நுட்பம் மெல்ல பயன்பாட்டுக்கு வரத் துவங்கி இருக்கிறது. எனினும், 4ஜி எல்டிஇ உலகின் பல்வேறு நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மொபைல் நெட்வொர்க் ஆக இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் 6ஜி தொழில்நுட்பத்தை வழங்குவோரில் முன்னணியில் இருக்க திட்டமிட்டு உள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த அனைத்து ஐபோன் 12 சீரிஸ் மாடல்களும் 5ஜி வசதி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *