கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உருவாக்கி பொது மக்களுக்கு செலுத்தி வருகின்றன.ஐரோப்பிய நாடுகள், தடுப்பு மருந்துகளை வாங்கி தங்களது குடிமக்களுக்கு செலுத்தி வருகிறது. ஆனால் ஏழை நாடுகளால் தடுப்பு மருந்துகளை வாங்க முடியாததால் அவர்களுக்கு உதவ உலக சுகாதார அமைப்பு கோவாக்ஸ் திட்டத்தை உருவாக்கியது.
பல்வேறு நாடுகள் இணைந்துள்ள இந்த திட்டத்தின் மூலம் தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இதையடுத்து அந்த நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன.இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு காரணமாக 60 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் தடுப்பு மருந்து ஏற்றுமதியை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.இதனால் அஸ்ட்ரா செனகா நிறுவனத்தின் தடுப்பு மருந்தின் பெரும் பகுதியை உற்பத்தி செய்யும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்துக்கு அனுப்பப்பட்டும் தடுப்பு மருந்து அளவு பெரும் அளவில் குறைந்து விட்டது. உலகில் உள்ள சில ஏழை நாடுகள் உள்பட 60 நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் போடப்படுவது நிறுத்தப்பட்டும் சூழ்நிலை உள்ளது.மேலும் முதல் டோஸ் செலுத்தி கொண்டவர்களுக்கு 2-வது டோஸ் செலுத்த மருந்து இல்லை. தடுப்பு மருநது தட்டுப்பாடு காரணமாக அதன் வினியோகம் கடந்த 5-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் அனைத்து வினியோகங்களும் ஜூன் மாதம் வரை நிறுத்தப்படலாம். இதனால் ரஷியா மற்றும் சீனாவின் தடுப்பு மருந்துகளை வாங்கும் உலக நடவடிக்கைகளை சுகாதார அமைப்பு விரைவுப்படுத்தலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது